புதன், 3 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 18. சிந்துவெளி எழுத்துகள் - ஒலி அளவு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 18.

      சிந்துவெளி எழுத்துகள் - ஒலி அளவு

“இரண்டு குறில் எழுத்துகளைச் சேர்த்து நெடில் எழுத்து உருவாக்கினார்கள். சான்றாக, இரண்டு அகரங்களை எழுதினால் ஆகார நெடிலாகும். இந்த வழக்கம் சிந்துவெளி முத்திரைகளில் இருப்பதை எடுத்துக்காட்டலாம்.

அரை மாத்திரையைக் குறிக்க  ஒரு பக்கக்கோடும் ஒரு மாத்திரையைக் குறிக்க இரு பக்கக்கோடும் ஆளப்பட்டுள்ளன.

 இசையை முதன்மைப் படுத்தியவர்கள்தான் எழுத்துகளுக்கு மாத்திரை அளவாகிய நேரத்தை வகுக்கமுடியும்.

உலகில் வேறு எந்த மொழியினரும் எழுத்துகளை ஒலிப்பதற்கு உரிய காலத்தை மாத்திரை என்னும் அளவாகக் குறிப்பிட்டுக் காட்டவில்லை.” பேராசிரியர், இரா. மதிவாணன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக