திங்கள், 8 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 22. புள்ளி வடிவம்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 22.

புள்ளி வடிவம்.

“ தொல்காப்பியர், உயிரெழுத்துக்களை உயிர் என்று குறியீட்டுச் சொல்லாலேயே குறிப்பிடுகிறார். மெய்யெழுத்துக்களைப் புள்ளி, மெய், ஒற்று என்று மூன்று குறியீடுகளால் வழங்குகிறார். மெய்யெழுத்துக்களை வரிவடிவத்தில் எழுதும்பொழுது புள்ளியை இடுவதால் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி என்று பெயர் அமைக்கப்பெற்றது என விளக்கங்கூறி ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’  என்றார். உயிர் மயங்கியல் என்று கூறியவர்  மெய் மயங்கியல் என வைக்காமல் ‘புள்ளி மயங்கியல் என்னும் புதுக்குறியீடு வைத்துள்ளார்.”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக