சனி, 13 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27. சிந்துவெளி

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27.

சிந்துவெளி

“ தெற்காசிய பகுதியில் தோன்றிய மிகப்பெரிய நகரிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகமாகும். சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 2600 – 1900 இக்காலப்பகுதியில் செழித்து சிறந்து விளங்கியது  அரப்பன் நாகரிகம் .

1) சிந்துவெளி எழுத்துக்களை எழுபது வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர். எனினும் அவ்வெழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. ஏனெனில்  சிந்துவெளி எழுத்துக்கள் – குறியீடுகள்.

அவை: மிகச்சிறியவை, சுருங்கக்கூறும் தன்மையுடையவை; ஐந்துமுதல் 26 வரையிலான குறியீடுகள்.

2.) இவை எம்மொழிக்குரியவை என்பது தெரியவில்லை.

3) இரு மொழி தன்மையற்றவை. இதன் மொழி வேறு எந்த மொழியுடனும் தொடர்பற்றதாக இருக்கிறது ; பொருள், தனித்த தன்மை உடையது.

 எனினும் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக்குக் குறிப்பாகத் தமிழுக்கு  நெருக்குமானவையாக (இலக்கண அடிப்படையில்) இருக்கின்றன. எண்கள் செங்குத்துக் கோடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கம் தமிழர்களீடம் இருந்ததை சங்க இலக்கியம் (அகநானூறு ) வழி அறியலாம்.”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக