செவ்வாய், 9 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 23. சுழி வடிவம்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 23.

சுழி வடிவம்.

“பதின்ம எண்முரை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்த பிராமி எண்முறையிலிருந்து தோன்றியது. இதற்கான சான்றுகள் குகைக் கல்வெட்டுக்களிலும் காசுகளிலும் கிடைத்துள்ளன. கி.பி. 4 – 6  குப்தர் காலத்தில் பிராமி எண்முறை பரவலாக்கப்பட்டது.

கி.மு முதல் நூற்றாண்டிலியே இந்தியர்கள் சுழியைக் குறிப்பிட ஒரு புள்ளி இட்டுள்ளனர். கி.மு. 3இல் பக்‌ஷாலி, சூன்ய, ஸ்தான என இதைக் குறிப்பிட்டுள்ளனர் என்று கருதுகின்றனர்.

சுழிக்குப் பதிலாக ஆரியப்பட்டர் ‘க’ என்ற எழுத்தைப் பயன்படுத்தியுள்ளார். கி.பி. 876 விக்ரம நாட்காட்டியில் சுழி   

(0) இவ் வடிவில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக