வியாழன், 4 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19. ஒலியன்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19.

ஒலியன்

ஒலியனாவது தனக்கென்று பொருண்மையும் இன்னொன்றினை வேறுபடுத்திக்காட்டும் முரண்மையும் உடையது.

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் ”-15.

இஃது உயிர் மெய்யொடு தனி மெய்யிடை வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (தனி மெய்யினது இயல்பு புள்ளியொடு நிற்றல்; உயிர் மெய்யினது இயல்பு புள்ளியின்றி நிற்றல்.)

மகரத்தின் வடிவம்.

“உட்பெறு புள்ளி உருவா கும்மே” -14.

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக