என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 20.
புள்ளி வடிவம்.
புள் – புள்ளி . புள் = சிறு
கட்டை. (கிட்டிப்புள் விளையாட்டில் இடம்பெறும் சிறு கட்டை)
“பழைய கல்வெட்டுக்களில் தோன்றுகின்ற
புள்ளி ஈண்டு நாம் பார்க்கும் தலை விரிந்து அடிகுறுகிய வடிவினது.ஒன்பதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் நந்தி விக்ரவர்மன் காலத்தில் எழுந்த கல்வெட்டுக்கள் இதற்குச் சான்றாகும்.
எனினும் இதன் பிறகு எட்டு நூற்றாண்டளவு புள்ளி என்பது மறைந்து போய் இக்காலத்தில் வட்டவடிவினதாய்த் தோன்றியுளது.ஆதலின்
பழந்தமிழர் மெய்யெழுத்திற்கு இட்ட புள்ளி நீண்ட இலிங்க உருவானதே என்று காணக் கிடக்கின்றது.
– பா.வே. மாணிக்க நாயக்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக