ஞாயிறு, 14 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28. மாத்திரை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28.

மாத்திரை

“தமிழில் எழுத்துவடிவுக்கும் எண் வடிவுக்கும் இசைவடிவுக்கும் நெருங்கிய தொடர்பு தொன்றுதொட்டு உண்டு.

‘ககரங் கொட்டெ எகரம் அசையே

ஏகாரம் தூக்கே  அளவே ஆய்தம்’

என்பது அடியார்க்குநல்லார் மேற்கோள். இவை மாத்திரைப் பெயர்கள், கொட்டு அரை மாத்திரை அதற்கு வடிவு – க ; அசை ஒரு மத்திரை , அதற்கு வடிவு – எ; தூக்கு இரண்டு மாத்திரை அதற்கு வடிவு – உ, அளவு மூன்று மாத்திரை அதற்கு வடிவு – ஃ எனகொள்க’ என்பது நல்லாரின் விளக்கம். – அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக