வியாழன், 18 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31. பதின்ம எண்முறை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31.

பதின்ம எண்முறை

இன்று புழக்கத்திலிருக்கும் பதின்ம எண்முறை (  Decimal Number 

System ) இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது அரபு வழியாக 

ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.பி. 7 இல் சிரியன் பாதிரியார் செவரஸ் 

 செபோக் ( Syrian bishep Serverus Sebokht   ) இந்தியர்கள் ஒன்பது 

எண்களுக்குக் குறியீடுகளையும் கொண்டிருந்தனர் என்று 

குறிப்பிடுகிறார். எனினும் பதின்ம எண் மதிப்பு முறை யாரால் 

கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிய முடியவில்லை என்கிறார்கள்.

( பதின்ம எண் மதிப்பு முறை தொல்காப்பியர் உலகுக்கு வழங்கிய 

கொடை என்பதை “ புள்ளி” என்னும்  ஆய்வுக்கட்டுரையை  என் 

‘உயிருக்குநேர்’ நூலில் விளக்கியுள்ளேன்.)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக