தமிழாய்வுத் தடங்கள் -19. இலாட்வியா நாட்டில் மாரியம்மா.
இலாட்வியா நாடு
இரசியா நாட்டில் பால்டிக் கடற்கரையில் அமைந்துள்ள
ஒரு குடியரசு நாடாகும். இலாட்வியா நாட்டு மக்களின் வழிபாட்டில் இடம் பெற்றுள்ள “மாரா” எனும் பெண் தெய்வம் உருவ அமைப்பிலும் வழிபாட்டு முறையிலும்
தமிழ் மாரியம்மாவை ஒத்திருப்பதாக இலாட்வியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘சிக்மா அங்க்ரவா’
கூறுகிறார். சிக்மா சென்னைப் பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற ஐரோப்பா - இந்தியா பண்பாட்டு தொடர்புகள் குறித்து ஆய்வுக்கட்டுரை
வழங்கினார். ஒரு நாள் திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கே ’மாரியம்மா’
என்ற பெயரைக் கேட்டவுடன் அதிர்ந்து போய்விட்டதாக வும் மாரியம்மன் இலாட்வியா நாட்டிற்குப்
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வழி எங்கள் நாட்டிற்கு
வந்திருக்கலாம் என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக