தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல்
படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.
2200
ஆண்டுகளுக்கு முற்பட்ட, கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலத் தமிழரின் வாழ்வியலை
உலகிற்கு வழங்கிய கீழடி அகழாய்வின் அருமை பெருமைகளை அறிந்த மாணவர்கள் சென்னைப் பல்கலைக்
கழகத் தொல்லியல் துறை முதுகலை வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த
50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு 88 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றார்
பேராசிரியர் பி.டி. பாலாஜி. 60 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்கெனவே 33 மாணவர்கள் பணம் கட்டியுள்ளனர். கடந்த காலங்களில் ஓரிரு மாணவர்களே
சேர்ந்துள்ளனர். 216-17 இல் 18 மாணவர்களே சேர்ந்தனர். இவ்வாண்டு 4 பொறியியல் படித்த
மாணவர்கள் தொல்லியல் துறையில் முதுகலையில்
சேர விண்ணப்பித்துள்ளனர்.
கீழடியில்
கிடைத்துள்ள தமிழி எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக