தமிழாய்வுத் தடங்கள் – 29: 16 ஆம் நூற்றாண்டு நடுகல்
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி இயற்பியல் பேராசிரியர் சரவணகுமார் ,
ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தாதப்பள்ளி என்னும் ஊரில் இந்த அரிய நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்நடுகல்லில் இருக்கும் வீரர்கள் 1.பெருமாள் 2.நாகனன். இவ்விரண்டு பெயர்களுக்கிடையில் சந்திரன், சூரியன் இடம்பெற்றுள்ளன. அஃதாவது கல்வெட்டுகளில் இடம்பெறும் ’சந்திர சூரியர் உள்ளவரை’ என்னும் பொருள் குறிப்பைக் கொண்டதாம். ஒரு வீரன் புலியின் முன்னே ஆயுதம் கொண்டு தாக்க, இன்னொரு வீரன் புலியின் பின் பக்கத்தில் தாக்குகிஆஅரான். இருவருமே வேட்டி அணிந்து, இடுப்பில் குத்துவாள் இருக்க, அவர்கள் கையிலும் காலிலும் கழல்கள் அணிந்துள்ளனர். தலையின் ஓரத்தில் கொண்டை முடிந்துள்ளனர். மலைப்பகுதியில் காணப்படும் இந்நடுகல், சிவலிங்க வழிபாடு, கர்நாடகாவில் உள்ள வீரசைவர்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகலாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைவாழ்மக்களின் தனிதன்மை உடைய பண்பாட்டினைச் சுட்டுவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக