திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்


தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்




தாகூர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் ஏ. பிரதீபராசன், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சோழர்காலத் திருவாண்டார் கோவில் ஊரில் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட ஒரே அளவிலான 10 சுடுமண் உறைகள் கொண்ட கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த  உறைக்கிணற்றைப் பேராசிரியர் பி. ரவி அவர்களின் வழிகாட்டலில் கண்டுபிடித்துள்ளார். இவ்வகழ்வாயில் சோழர்காலத்தில் வளமான வாழ்க்கை வாழ்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. இதே போன்ற சுடுமண் உறைகள் கொண்ட கிணறுகள் அரிக்கமேடு, மணப்பேட்டைப் பகுகளிலும் அகழாய்வில் கிடைத்துள்ளன.  பேரா. ரவி  ஒரு மாணவர் குழுவை அமைத்து புதுச்சேரியைச் சுற்றியுள்ள ஊர்களில் விவான அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய இடங்களை கண்டறிய ஏற்பாடு செய்தார்.அகழாய்வுகள் சோழர்களின் அறிவியல் அறிவை உறுதிப்படுத்தியுள்ளது.

உறைக்கிணறு முன்னேறிய தொழில் நுட்பத்துடன்  ஒரு குளியல் அறை போலவும் நீர் வெளியேற சுடுமண் குழாய்கள் பதித்துள்ளனர்.

ராசன்  ஆய்வின் வழியே திருவாண்டார் பகுதியில் சோழர் காலத்தில் மக்கள்   நல்ல செழித்தோங்கிய வளமான நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். என்றும்  கோவில் சுற்றுச் சுவர்களில் சிறப்பான வரலாற்றுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது என்றும் கூறினார். மேலும்  சில ஆண்டுகளுக்கு முன் கோவிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது பல வெண்கலக் கடவுள் சிலைகள்   கிடைத்தன என்று ராசன் பேரா.ரவியிடம் கூறினார். பேரா. ரவி,  கி.பி.1300 இல் தில்லி சுல்தான் அலாவுதின் கில்சியின் படைத் தலைவர் மாலிக்காபூர் இப்பகுதியில் படையெடுத்துவந்தபோது  இங்கிருந்த பாண்டியர்களும் சம்புவராயர்களும் இப்பகுதியை விட்டு வெளியேறுமுன் இறைவன், இறைவி சிலைகளை மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த உறைக்கிணறு போன்ற  வேறுபல் உறைக்கிணறுகளும் அரிக்கமேடு அகழாய்வில்  (2002இல்) கிடைத்துள்ளன.

தென்னிந்தியாவில் கிடைத்துள்ள கிணறுகள் கி.மு. முதல் நூற்றாண்டிற்கும் கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்தவையாகும் என்பதை அண்மைக்கால அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

மாணவர் ராசன், இவ்வகழாய்வு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ;  முன்னோர் நாகரிகத்தை அறிந்துகொள்வதற்கு மேலும் பல அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக