புதன், 17 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -21 –டைனசோர் விலங்கினம்.அன்சு வைலியே.

 

தமிழாய்வுத் தடங்கள் -21 –டைனசோர் விலங்கினம்.அன்சு வைலியே.



இலண்டன் : அறிவியல் வல்லுநர்கள் ஓர் அதிசய விலங்கின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  12 அடி நீளமும் 226 கிலோ எடையும் கொண்ட இந்த விலங்கினத்திற்கு. அன்சுவைலியே எனப் பெயரிட்டுள்ளனர்.இப்பெரிய விலங்கு கோழியின் முக அமைப்பையும். இறகுகளையும் கொண்டுள்ளது. இவ்விலங்கு  66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும் இது டைனசோர் விலங்கினத்தைச் சார்ந்ததாகவும் கருதுகின்றனர்.இது மெசபடோமியன் புராணங்களின் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தமிழிலக்கியங்களில் அசுணம் என்றொரு விலங்கு சுட்டுப்படுகின்றது.

“அசுணங் கொள்பவர் கைபோல் நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே.” நற்றிணை: 304.

இசையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவருடைய கையைப் போல் இன்பமும் துன்பமும் உடையதாயிரா நின்றது.

அசுணம் கொல்பவர் முதலில் யாழை மீட்டி , இசையில் மயங்க வைத்து, பின்பு அதன் செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அதனைக் கொல்வதனால் இன்பமும் துன்பமும் உடைமையின் அசுணத்தை உவமித்தார் என்பர். இஃது ஓர் அதிசய விலங்கு ; இது அழிந்துபோன விலங்கினங்களுள் ஒன்றாக இருக்கக்கூடும். ---(மேலும் காண்க: அகநானூறு,88; கலித்தொகை 143 ; நற்றிணை. 244 ; சீவக சிந்தாமணி :1402.)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக