தமிழாய்வுத் தடங்கள் – 26 : பழனியில்
சங்க காலக் குகை ஓவியங்கள்.
2500 ஆண்டுகளுக்கு
முன்பு சங்க காலக் குகை வாழ் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கு உதவும் ஓவியங்களைத்
தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வ றிஞர்கள் குழு,
வி. நாராயணமூர்த்தி, கன்னிமுத்து
ஆகியோர் தலைமையில் ஆண்டிப்பட்டி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு ஆடு மேய்த்தவரிடம்
குகை இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு சுமார்
இரண்டு மணி நேரம் மலை மீதேறி குகை ஓவியங்களக் கண்டனர். ஓவியங்கள் வெள்ளை நிறத்தில்
மரப்பசை கொண்டும் பச்சிலை வண்ணங்களைக் கொண்டும் தீட்டப்பட்டிருந்ததை ஆய்வு செய்தனர்.
அவைகள் கேலிச் சித்திரங்கள் (இன்றைய கோட்டோவியங்கள்)
போலிருந்தன. ஒரூ பக்கம் குழிதோண்டி அதில் யானையைப் பிடிக்கும் முறையும் அவர்கள் தலைவன் யானை மீதேறி வருவது போலவும் இருந்தன. விழாவுக்காகப்
பெண்டிர் பானையில் நீர் எடுத்து வருவதுபோலவும்,
குழந்தைகள் கைகோர்த்து நடனமாடுவது போலவும் விழாவில் ஓர் ஆடு பலியிடுவது போலவும் ஓவியங்கள்
இருந்தன. ஒவியங்கள் குறிஞ்சி நிலமக்களின் சடங்குகளைக் காட்டுவதாக அமைந்திருந்தன. தீட்டப்பட்ட
ஓவியங்கள் சங்க கால இனக்குழு மக்களின் வாழ்வியலாகும். இதனால் இத் தொல்பழங்குடி மக்கள்
கி.மு. 1000 – 300. காலப் பகுதியில் வாழ்ந்தனர் எனலாம். இவ்வோவியங்கள் மத்திய பிரதேச
பீம்பெட்கா குகை ஓவியங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக