தமிழாய்வுத் தடங்கள்
-11 – “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”
(குறள்:69)…..தந்தை.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தை ஒரு வரலாற்று நாயகராக விளங்குகிறார்.
தாய்நாட்டிற்காகப் போரிட்டு வீரமரணம்
எய்திய தன் மகனை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார் ஆர். வரதராசன்.
போரில் களங்கண்டு வீரமரணம் எய்தும் வீரர்களைப்
பெற்றதற்காக மறக்குடி மகளிர் பெருமை கொள்வதை சங்க இலக்கியங்களில் காணலாம்...
”கெடுக சிந்தை; கடிது இவள்
துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலக்கி, ஆண்டுப்பட்டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே ! ”
-ஒக்கூர் மாசாத்தியார், புறநானூறு:
279.
”இவளது
சிந்தை கெடுக; இவளது துணிவு கடுமையானது. இவள் முதுமையான மறக்குடியின் பெண்ணாக
இருப்பதற்கு தகுந்தவள் தான். முன் ஒரு நாளில் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையை எதிர்த்துப் போரிட்டு களத்தில் உயிர் நீத்தான். நேற்று
நிகழ்ந்த போரில் இவளது கணவன் பசுக்களை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் உயிர்
துறந்தான்.
இன்று, தெருவில் போர்ப்பறை ஒலி காதில்
கேட்டதும் முகம் மலர்ந்து, அறிவு மயங்கி தெருவில்
விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனின் கையில் வேல் கொடுத்து, வெண்மையான ஆடையை விரித்து உடுத்தி, அவனது உலர்ந்த
தலைமயிர் குடுமியை எண்ணெய் பூசிச் சீவி, போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு அனுப்பிவைத்தாள்.
இவளது துணிவையும் நாட்டுப்பற்றையும் என்னவென்று சொல்வது. ”
(இணையப்பதிவு.)
தொல்தமிழர் வாழ்வியலில் பெண்கள் போர்க்களம் புகுதல் இல்லை.
பெண்கள் அக மாந்தர்களாக இல்லறக்கடமைகள் ஆற்றுவதற்குரியவர்களாகவும் ஆடவர்
புற வினை ஆற்றுதற்குரியவர்களாகவும் விளங்கினர். எனினும் கொற்றைவை எனும் பெண்தெய்வ வழிபாடு
போருடன் தொடர்புடையதாக அறியமுடிகிறது. புண்பட்டு போர்க்களத்தில்
உயிர்நீத்த வீரர்களைப் பெற்ற மகளிரைப் பெருமைக்குரியர்வர்களாகப் போற்றினர்.
தமிழ்நாட்டில்
போர்க்களம் புகுந்து பகைவரைக் கொன்றொழித்துத் தன் நாட்டை மீட்ட சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார்
(1730 – 1796) வரலாற்றில் சிறப்பிடம்
பெற்றார். பின்னர், ஈழத்தில் விடுதலைப்
புலிகள் படையில் பெண் போராளிகள் களங்கண்டு உலகையே அதிர வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக