ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனா – கேரளா; வாணிகத் தொடர்பு.

 

 தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனாகேரளா; வாணிகத் தொடர்பு.



கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கேரளாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற வாணிகத் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.கொல்லத்தில் உள்ள தங்கசேரி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றபொழுது சீன மண்பாண்டச் சிதறல்கள் கிடைத்தன.

இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் கே.கே. முகம்மது , சீனாவில் ’சங்’ மரபினர் ஆட்சியின் போது பரவலகப் பயன்படுத்தப்பட்ட ”நச்சுத் தட்டு” (பாய்சன் பிலேட்டு) முன்னோர்கள் பயன்படுத்திய அசல் பீங்கான் தட்டுத் துண்டுகள் கிடைத்துள்ளன என்றும் சங் அரசர்கள் இந்தச் சிறப்பான தட்டுகளில் உணவருந்தினர், இத்தட்டு நச்சுகலந்த உணவாக இருந்தால் தட்டில் தெறிப்புகள் ஏற்படும் என்றும் வேறு சிலர் இந்தத் தட்டில் நச்சு உணவு இருந்தால்  தட்டின் வண்ணத்தையோ, உணவின் வண்ணத்தையோ மாற்றிக்  காட்டும் என்ற கதையை ஆராய வேண்டி த் தட்டின் சிதறிய துண்டுகளை கேரளா வரலற்று ஆய்வகத்தில் வைத்துள்ளதாக முகம்மது கூறினார்.

சீனத் தட்டுகளைப்போன்று கேரளத்தில் உற்பத்திசெய்ய கொல்லத்தில்  ஆலை அமைத்திருந்ததாகவும் அது பல நூற்றாண்டுகள் செயல்பட்டதாகவு கருதுவதாக  கேரளா தொல்லியல்துறை இயக்குநர் ஜி.பிரேம்குமார் தெரிவித்தார்.

சீன ஆலைகள் கொல்லத்தில் செயல்பட்டதாக மூன்று (வான் டாயூன், ஃபெய்கிசின்.  முகூன்)  சீனப் பயணிகளின் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் 600 காசுகள் தங்கசேரி  துறைமுகக் கடற்கரையில் கிடைத்துள்ளன. இக்காசுகள் ’டாங்’ (618 – 907) ’மிங்’ (1368 – 1644) அரசர்கள் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டவையாகும். இக்காசுகளில் வாழ்த்துச் செய்தியாக  ’வளத்துடனும் மதிப்புடனும் நீடூழி வாழ்க’ என்று பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் போல் போலியாக உருவாக்கப்பட்டுள்ள காசுகளை ’ பெங்சூய் ‘ சந்தையில் காணலாம் என்று முகம்மது கூறினார்.

 

(மேற்குறித்துள்ள வரலாற்றுச் செய்திகள் தஞ்சையத்  தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பிற்காலச் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்தவையாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மேலும் ஆராய்ந்து பர்க்கவேண்டும்.)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக