“தமிழாய்வுத் தடங்கள் -16. செர்மனி கொலோன்
–பல்கலைக்கழகம் : இந்தியவியல், தமிழாய்வுத்துறை.
1970-80களில் தலைவர் செனார்ட்,
”என்னுடைய துறையில் படிக்க விரும்பும்
மாணவர் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட
திராவிட மொழிகளைக் கற்க வேண்டும் குறிப்பாகத் தமிழைக் கட்டாயம்
படிக்க வேண்டும்” என்று
வலியுறுத்தி ஒரு விதி வகுத்து வைத்திருந்தார். இவ்விதிக்கு ஒப்புக்கொண்டு உல்ரிக்
நிக்லசு எனும் பெயர்கொண்ட இளம் பெண்மணி ஆர்வமுடன் சேர்ந்து கல்வி பயின்றார்.
பல
அரிய சாதனைகள் படைத்துத் தமிழை மேன்மையுறச் செய்தார். பின்னாளில் அவரே அத்துறையின்
தலைமைப் பொறுப்பேற்று தமிழ்நாடு வந்து, தமிழின்
அரிய பெரிய இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு தஞ்சை மாவட்ட ஊர்களுக்குச் சென்று தமிழர்களின்
வாழ்க்கைமுறைகளை நேரில் கண்டு ஆராய்ந்து பிஎச்.டி.
பட்டம் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
அன்றைய
முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அழைப்பினை ஏற்று அவரைச் சந்தித்து , உலகத் தமிழ் செம்மொழி
மாநாட்டிலும் பங்கேற்றார். கொலோன் பல்கலைக் கழகத்தில் 40,000, தமிழ் நூல்களைக் கொண்டு ஒரு பெரிய நூலகம் அங்கு
உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக