தமிழாய்வுத் தடங்கள் – 27 : எடக்கல் குகையில்
தமிழி கல்வெட்டு.
கேரளா,
வயநாடு மாவட்டத்தில் எடக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள குகையில் சிந்து வெளி நாகரிகத்தோடு தொடர்புடைய தமிழி எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டு ஒன்றினைத் தொல்லியல் ஆய்வாளர் எம்.ஆர். இராகவ வாரியார் கண்டுபிடித்துள்ளார்.
இக்கல்வெட்டு கி.மு 5ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது என்கிறார். இதில்
உள்ள எழுத்துக்களை ’சிறீ வழுமி’ என்றும் இச்சொல்லின் பொருள் ’கடவுள் பிரம்மா’ என்பதாகும்.
இக்கல்வெட்டு எழுத்து வடிவ முறை இந்திய மரபு உடையதாகத் தெரிகிறது. எடக்கல் குகைகள்
வளநிலப் பண்பாடு கொண்டவையாகும். எடக்கல் வெளிப்படுத்தும் நாகரிகம் இந்தியாவின் தென்பகுதி
வரை பரவியது எனலாம். இக்குகைகளில் சமண பெளத்தத்
துறவிகள் வாழ்ந்து இவ்வெழுத்துக்களைக் கொண்டு இலக்கண இலக்கியங்களையும் மருத்துவம், வானியல் முதலியவற்றைப் பாடங்களாக எழுதினர்.
எடக்கல் குகை அரிய பல வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும்
என்கிறார் வாரியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக