தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.
கிருட்டினகிரி
மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
கிருட்டினகிரி
வரலாற்றுப்பேரவைத் தலைவர் அறம். ஏ. கிருட்டினன்,” இவ்விரண்டு நடுகற்களும் அரிதினும்
அரிதாக நமக்குக் கிடைத்துள்ளது. பெண்டிர் போர்க்களம் நோக்கிச் செல்வது முதன்முதலாக
இங்கே தான் கிடைத்துள்ளது” என்றார்.
மேலும்
அவர் , பொதுவாகப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு
மட்டுமே நடுகல் நாட்டுவது மரபு.
குறிப்பாக
ஒரு நடுகல்லில் மூன்று பெண்கள் போர் ஆயுதங்களுடன்
குதிரையில் செல்வதும் இன்னொரு நடுகல்லில் இரண்டு பெண்கள் குதிரை மீதேறிச் செல்வதக்
காணலாம் .” என்று கூறினார்.
இவ்விரண்டு
நடுகற்களும் சந்தனப்பள்ளி ‘பன்னியம்மன்’ இருந்துள்ளன . ஆனால் இவ்வூர் மக்களுக்கு இவை வீரர் வழிபாட்டிற்குரியவை என்று தெரியாது.
கிருட்டினன்,
முதல் நடுகல்லில் இருக்கும் மூன்று பெண்களில்
ஒருவர் அரசியாக இருக்கலாம், குதிரையில் இருக்கும் ஏனைய இருவரும் போர் மறத்தி களாக இருக்கலாம்.மூன்று
பெண் வீரர்கள் தங்கள் வலது கையில் படைக் கருவிகளைக் கொண்டிருக்கின்றனர்.. இந்நடுகல்லில்
ஓர் ஆண் இருக்கிறார், அவர் அப்பெண்களின் பாதுகாவலராகவோ அல்லது அவரும் ஒரு வீரராகவோ
இருக்கலாம்” என்று கூறினார்.
எனினும்
இந்நடுகற்களைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்குச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை
என்றார்.
தொல்பழங்காலத்
தமிழர் வாழ்வியலில் பெண்டிர் போர்க்களம் புகும் மரபில்லை. மறக்குடி மகளிர் குறித்து
விரிவாகப் பேசும் சங்க இலக்கியங்கள் போர்த்தொழிலுக்குரிய
ஆண் மறவர்களை ஈன்றெடுத்தலும் வெற்றி வீரனாக களத்தில் மார்பில் புண்பட்டு இறந்தானா என்று பார்த்துத் தாய் மகிழ்வதையே இலக்கியங்கள்
கட்டுகின்றன.
18ஆம்
நூற்றாண்டில் போர்க்களம் புகுந்த வீர மங்கை வேலுநாச்சியார், குயிலி இன்றும் நம் நினைவில்
நிற்பதை மேற்சுட்டிய நடுகற்கள் காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக