“தமிழாய்வுத்
தடங்கள் -14.ஆத்திரேலியா நாட்டில்
வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 2
ஆத்திரேலிய
”பப்புவ நியு கினியா” பகுதியில்
வாழும் பழங்குடியின மக்கள் பழங்காலத்தே தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அப்பகுதியில்
குடியேறியுள்ளனர். அவர்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழையும் பழக்க
வழக்கங்களையும் போற்றிவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த கே.வி.எசு. கிருட்டினன் என்பவர் தோட்டத்
தொழில் தொடங்க அவ்விடம் சென்று அங்கு வாழும் மக்களோடு பழகியபின் அவர்கள் பேசும் மொழி
தமிழ் என்பதைக்கண்டறிந்து ஆய்வில் இறங்கினார்.
பப்புவ
நியு கினியா நாட்டின் தலைமை அமைச்சரின் பெயர் ‘ ராபி நமாளு’
( ராபி நம்ம ஆளு) மேலும் பல தமிழ்ச் சொற்கள்……”கைநாட்டு, கரிமுய், (கரிய முகம் ) மரணம், மணி, போ, பாக்கு,
ஐயா, அண்ணா, பாக்கி, பாலா, குண்டு, குரு, ஜெயம், கை – இச்சொற்களையெல்லாம் ஆய்வாளர்
எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார்.
இவ்வாறு
தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர் என்பதற்கு இஃது ஓர் சான்றாக விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக