திங்கள், 15 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -20 – கடல் கொண்ட தென்னாடு.

 

தமிழாய்வுத் தடங்கள் -20 – கடல் கொண்ட தென்னாடு.

நிலம் புடைபெயர்தல்  (கண்டப்பெயர்ச்சி)

நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்

கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே”.- கபிலர் ,பதிற்றுப்பத்து:63.

ந்லவுலகம் தன் கூறுபாடுகள் எல்லாம் நீங்கும் ஊழிக்காலம் என்றாலும் நீ (செல்வக்கடுங்கோ வாழியாதன்) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.(மேலும் காண்க : புறநானூறு,3,34, நற்றிணை,289.)

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள.” –சிலப்பதிகாரம் 11: 9-11)

தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடும் தென் மாவாரியில் முழுகிப்போன பெருநிலமான குமரிக் கண்டத்தின் தென்கோடியடுத்து, பனி மலை(இமயம்) போலும் ஒரு மாபெரு  மலைத்தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக்கண்டம் எனப்பட்டது.

குமரிக்கண்டத்தின் வடகோடியில், குமரி என ஒரு பேரியாறுமிருந்தது.” –பாவாணர்.




அறிவியல் அறிஞர்கள் இந்தியாவுக்கும் மடகாசுகருக்கும் இடையே ஒரு மூழ்கிப்போன கண்டத்தின் எச்சங்களை அஃதாவது, கடலின் அடியில் பெரிய அளவிலான எரிமலைக் குழம்பின் படிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்ஒருபகுதி,  கிழக்கு கோண்டுவானா வெடித்துச் சிதறிய பின், முதலில் பிளவுபட்டது .பின்னர் எஞ்சிய நிலப்பகுதிகள் சிதறுண்டு இந்தியா, ஆத்திரேலியா, அண்டார்டிக்கா என தற்பொழுது  உள்ள நிலையை எய்தின.

 ஒரு பெரிய நிலப்பரப்பு கடலுள் மூழ்கியதில் கடல் கொண்ட தென்னாடும் (குமரிக்கண்டம்) ஒரு பகுதியாகலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக