தமிழாய்வுத் தடங்கள் -12. ஆழிப்பேரலை – சங்க இலக்கியச் சான்றுகள்.
.
பாண்டியர்காலச்
செப்பேடுகள் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல்11ஆம்
நூற்றாண்டு வரை 25 செப்பேடுகள் கிடைத்துள்ளன.. இச்செப்பேடுகள் பற்றிய குறிப்புகளை மேலே உள்ள செய்திக்குறிப்பில் கண்டு தெளிக.
அரிசில் கிழார் , பதிற்றுப்பத்து:
72.
“துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்
பொறை ஒராஅ நீர்ஞெமர வந்துஈண்டி
உரவுத்திரை
கடுகிய உருத்துஎழு வெள்ளம்
வரையா
மாதிரத்து இருள்சேர்பு பரந்து” –
எல்லா
உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலத்தின் இறுதி புகுகின்ற போது, நிலவுலகின் பாரம் நீங்க, நீரானது எங்கும் பரவும்படி வந்து
நெருங்கும் ; அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும்
; இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம்
, எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து
பரவும்.
சோழன் நல்லுருத்திரன், கலித்தொகை:
104 …..கடல் கொண்ட தென்னாடு.
“மலிதிரை
ஊர்ந்து தன்மண் கடல் வெளவலின்
பொலிவின்றி
மேல்சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு
வில்நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான்
வணக்கிய வாடாச்சீர்த் தென்னன்
தொல்
இசை நட்ட……………………………”
ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து
பாண்டிய நாட்டின் (இலெமூரியா) மண்ணைக் கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று, மனம் தளரா
பாண்டிய மன்னன், தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க
வேண்டி, அவர் மேல் படையெடுத்தான் சோழர், சேரர்
படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன்கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில்
நாட்டி ஆர்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.
இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்: 11:19-22.
பஃறுளி
யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்
கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக்
கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை
ஆண்ட தென்னவன் வாழி.”
பஃறுளி ஆற்றுடனே பலவாகிய பக்க மலைகளை
உடைய குமரி மலையையும் கடல் கொண்டதனால் வடதிசைக் கண்ணதாகிய கங்கை ஆற்றினையும் இமயமலையினையும்
கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென் திசையை ஆண்ட தென்னவன் வாழ்வானாக. (மேலும் காண்க:
பரிபாடல் 8)
“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக