தமிழமுது – 46.
கடவுளைப்பற்றி….!
கடவுளைப்பற்றி இதுவரை வெளிவராத சில உண்மைகள்
இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடவுள்
உண்டா…இல்லையா..? என்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.. நம்முடைய கவலையெல்லாம் கடவுள் இருப்பதாகக் கூறும் மனிதர்களைப்பற்றித்தான்.
எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உறைகின்றார்; எனவே எல்லோருக்கும் கடவுளைத் தெரியும்.
கடவுள் இருக்கிறார் என்று ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் தன் இருப்பை
உயிர்களுக்கு உணர்த்தும் சக்தியுடையவன்தானே..? அந்தப்பணியைக் கடவுளின் ‘பங்காளியாக’
இன்னொரு மனிதன் தன் கையில் எடுத்துக்கொள்ள
வேண்டுமா? அறியாமையால் கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக வழிபடுவதில் மனிதனுக்கு
ஆறுதல் கிடைக்கிறது அப்படியொரு நம்பிக்கை.. அஃது அவரவர் விருப்பம்.ஆனால் கடவுளை எப்படித்
தொழவேண்டும் எந்த மொழியில் வேண்டுதல் வைக்க
வேண்டும்..? கடவுள் நீதிபதியாக இருக்கிறார்
அவரிடம் நம் வேண்டுதலை எடுத்துரைக்க வழக்குரைஞர் ஒருவர் வருகிறார். பணமும் பொருள்களும் பெற்றுக்கொள்கிறார் ; அவர் என்ன
சொன்னார் , எந்தமொழியில் சொன்னார்..? ”கடவுள் மொழியில்” சொன்னாராம். அந்த மொழி தோன்றியபின்தான் கடவுள் தோன்றினாரா..?
…………………………………………..தொடரும்………………………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக