தமிழமுது – 55.
கடவுளைப்பற்றி….!
மதம் – மார்க்சீய நோக்கு ;
சமுக உறவுகளைப் பற்றிய விளக்கத்தை நோக்கிச் சென்ற
மார்க்சின் சிந்தனை ”பொருளின் மொழியில்” பேசுவது, “ ”ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன்
சாராம்சத் தன்மைக்கு ஏற்ப” புரிந்து கொள்வது அவசியம். பொருள்கள் “ அவை மெய்யாகவே இருக்கின்ற
முறையில்” …புரிந்து கொள்வதில்தான் உண்மை இருக்கிறது என்று மார்க்சு 1842 ஆம்
வருடத்தின் தொடக்கத்தில் எழுதினார்.
இப்பொருள்முதல்வாத நிலையிலிருந்து மார்க்சு
கெகலின் “ பல கடவுள்களைக் கொண்ட இறை ஞானத்தை “ விமர்சித்தார் ; அங்கே “ சிந்தனை அரசின்
தன்மையுடன் பொருந்துவதில்லை, ஆனால் முன்னரே தயாரிக்கப்பட்ட சிந்தனா முறையுடன் பொருந்துகிறது. பல்வேறு வடிவங்களைப் பெறுகின்ற அரசின் உள்ளடக்கத்தை
அதன் மூலமாக “ அரசு என்ற கருத்தின் மூலமாக” விளக்கமளிக்க்க் கூடாது, ஆனால் குடும்பம்
மற்றும் ‘சிவில் சமுகம்’ என்ற பொருளாயத உறவுகளின் துறையிலிருந்து விளக்கமளிக்க வேண்டும்
என்று மார்க்சு வலியுறுத்துகிறார்.
“நரகத்தின்
வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல, விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை
வற்புறுத்தப்பட வேண்டும் ; இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள் ; எல்லாவிதமான கோழைத்தனத்தையும்
ஒழித்துவிடுங்கள்.” என்றார் மார்க்சு.
சேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த
“மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதென்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844 ஆம் வருட்த்தின்
பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்சு மேற்கோள் காட்டுகிறார்.
இந்த மஞ்சள் அடிமை
மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும்
செய்யும்
கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும்
குட்ட நோயைப் போற்றச் செய்யும்
திருடர்களுக்குப் பட்டம் வழங்கி
அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும்
பெருமையும் அருளும்.
சேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச்
சிறப்பான முறையில் சித்திரிக்கிறார். குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்துகிறார்
என்று மார்க்சு கருதுகிறார்.
பணம்
கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள் - எல்லா மனித
மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர் நிலைகளாக மாற்றி அமைத்தல்.பொருள்களை
சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.
பணம் ஒரு பொதுவான விபசாரி மக்களையும்
தேசங்களையும் கவர்ந்திழுப்பது பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட “மனித குலத்தின் திறமை”.
…………………..தொடரும்……………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக