திங்கள், 23 ஜூன், 2025

தமிழமுது – 54. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

தமிழமுது  54. கடவுளைப்பற்றி….!

மதம்மார்க்சீய நோக்கு ;

”….. நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்த கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்.” –காரல் மார்க்சு.

 மார்க்சு 1842 ஆம் வருட்த்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய கட்டுரைகளில் ஒன்றில் நாத்திகவாதம், பொருள்முதல்வாதம் மனிதாபிமானத்தின் அகத்தூண்டுதலான அறிவிப்பாளரான லுட்விக் ஃபாயர்பாகை “நம் காலத்தின் பாவம் போக்குமிடம்”  சுதந்திரம் மற்றும் உண்மைக்குப் பாதியில் இருக்கின்ற “நெருப்பு ஆறு” என்று பிரகடனம் செய்தார்.

அவர், ஊகமுறையில் சிந்திக்கின்ற இறையியலாளர்களுக்கும்  கருத்துமுதல்வாதிகளுக்கும் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்.”விடயங்கள் யதார்தத்தில் மெய்யாக எப்படி இருக்கின்றன என்பதி நீங்கள் அறிய விரும்பினால் பழைய ஊக முறை தத்துவஞானத்தின் கருத்தமைப்புகள் மற்று தப்பு எண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்…”

 லூட்விக் ஃபயர்பாக் எழுதிய “கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம்” என்ற நூலை 1841ஆம் வருடத்தின் கோடைக்காலத்தின்போது படித்தார். அந்தச் சமயத்தில் இளம் கெகலியவாதிகள் மீது இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கல்சு அழகாக வருணித்துள்ளார்.

 இளம் கெகலியவாதிகள் சிக்கிக்கொண்டிருந்த எல்லா முரண்படுகளையும் இந்நூல் “ஒரேயொரு அடியில்”  ஒழித்து, பொருள்முதல் வாதத்தின் வெற்றியை நேரடியாகப் பிரகடனம் செய்தது. “எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால்  சுதந்திரமாக இருக்கிறது. இயற்கை. அதன் அடித்தளத்திலேதான் மனித இனத்தவராகிய நாம் –நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருள்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம்..

 இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்ட்தாய் எதுவும் இல்லை. நம்முடைய சமய வழிப்பட்ட கற்பனைகள் படைத்துள்ள. கடவுள்கள் எனப்பட்டவர்கள் நம் சாராம்சத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். மந்திரம் என்பது உடைத்தெறியப்பட்டது ; அமைப்புமுறை தகர்க்கப்பட்டுவிட்டது ; முரண்பாடு என்பது நம் கற்பனையில் மட்டுமே இருப்பது என்று காட்டப்பட்டுக் கலைக்கப்பட்டது

அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும்..

…………………..தொடரும்……………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக