தமிழமுது – 48.
கடவுளைப்பற்றி….!
மதத்தின் மறுபக்கம் :
மதம் கடவுளின் அற்புதசக்திகளை பொய்யாகவோ
புனைந்திரையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக மாற்றம் பெற்றது.மதம் மக்களை
அடிமையாக்கும் அளவிற்கு உயர்ந்த பொழுது அதன் போக்குகளைக் கட்டுப்படுத்த பலர் கிளர்ந்தெழுந்தனர்
; அவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஓர் இயக்கமாகப் பரிணமித்து
உலகெங்கும் ஆங்காங்கே தோன்றினர். கடவுள் இல்லையென்று கூறி மக்களின் அறியாமையை அகற்றப்
போராடினர். ஆயினும் மதம் ஆளும் அதிகாரம் உடையோர்
கையில் வலிமைபெற்று வாழ்ந்து வரலாயிற்று. மக்களின் வாழ்க்கையில் கடவுள் வழிபாடு பிரிக்க
இயலாத ஒன்றாயிற்று. தொல்பழங்காலம் தொட்டு இன்றுவரை கடவுள் உண்டு என்று சொல்வோர் ; கடவுள்
இல்லையென்று சொல்வோரை இழித்துரைக்கின்றனர்,
தமிழ்நாட்டில், தொல்பழங்காலத்தில் முருகனும்,
தாய் தெய்வமாக கொற்றவையும் வழிபாட்டிற்குரியவராவர். பின்னர் நிலத்திற்கேற்ப வேறு பல
தெய்வங்களும் தோன்றின. அக்காலத்தில் சிறந்திருந்த ‘நடுகல் வழிபாடு’ பல்வேறு கடவுள்களாகச்
செதுக்கப்பட்டு மன்னர்கள் கட்டுவித்த கோயில்களில் நிறுவப்பட்டன. சமணம், பெளத்தம், ஆசீவகம்,
வைதீகம் எனும் மதங்கள் , குருமார்கள் வழிபாட்டு
நெறிகளை வகுத்து மக்களிடையே பரப்பினர்.
கடவுள் வழிபாடு - எதிர் வினை:
கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக
வழிபடுவதில் மனிதனுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று “எல்லாமே கடவுள்
செயல்தான்” என்று சொல்லிவிட்டால் ஒரு மனிதன் சக மனிதனிடம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டிய
அவசியமில்லையல்லவா..?
…………………………………………..தொடரும்………………………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக