தமிழமுது – 53.
கடவுளைப்பற்றி….!
மதம் – மார்க்சீய நோக்கு ;
மிதவாத முதலாளி வர்க்கத்தின் தலைவர்களிலொருவரான
அர்னால்டு ரூகே செர்மன் வார இதழ் ஒன்றை நடத்திவந்தார்
அவர் 1841, செப்டம்பரில் பின்வருமாறு எழுதினார்
” இப்பொழுது எனக்கு மோசமான நேரம் ஏனென்றால் பு. பெளவர், காரல் மார்க்சு கிறிஸ்டியன்சென்,
ஃபயர்பாக் ஆகியோர் அஞ்சாநெஞ்சத்தைப் பிரகடனம் செய்யப் போகிறார்கள் அல்லது அவர்கள் ஏற்கெனவே
பிரகடனம் செய்துவிட்டார்கள், நாத்திகவாதம் மற்றும் ஆன்மாவின் அழிவு என்ற கொடியை ஏற்றிவிட்டார்கள் ; கடவுள்,
மதம் அமரத்துவம் ஆகியவை கீழே இறக்கப்படும், மக்களே கடவுள்கள் என்று பிரகடனம் செய்யப்படும் நாத்திகவாத இதழ் வெளிவரப்போகிறது. போலிசார்
இதை இப்படியே அனுமதித்தால் கொந்தலிப்பு ஏற்படும். ஆனால் அதை தவிர்க்க முடியாது.
இந்தத் திட்டம் நிறைவேறவில்லை, பானில் பேராசிரியர் பதவியைப்
பெறுவதென்ற மார்க்சின் நம்பிக்கைகளும் உடைந்தன.
ஏனென்றால் பிற்போக்குவாத விமர்சன தாக்கத்தின் விளைவாக ப் புருனோ பெளவர் தன்னுடைய ஆசிரியர்
பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கே மார்க்சுக்கு வேலை கிடைப்பது கடினம் என்பது தெளிவாயிற்று.
கெகலின் கருத்துப்படி அரசின் உருவகமே அரசர்.
கெகல் அவரை உண்மையான ‘கடவுள் மனிதனாக’ அரசு
என்ற கருத்தின் உண்மையான உருவமாகக் காட்டுவதற்கு முயற்சி செய்கிறார். எல்லாக் குடிமக்களின்
நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, ‘பொது நன்மையை’ நிறைவேற்றுவதற்காக அரசு இருக்கிறது என்பார் கெகல்.”
அதிகாரத்தின் முழுச் சக்தியையும் ஒரு நபரிடம்
குவிக்கப்படுகின்ற பொழுது மற்ற எல்லா நபர்களுமே சக்தியில்லாதவர்களாகி விடுகிறார்கள்.
ஒரு நபர் ‘கடவுள் மனிதன்’மென்ற நிலைக்கு உயர்த்தப்பட்டால் மொத்த சமுகமுமே மனிதத் தன்மைக்கு
முந்திய விலங்குக்கு உரிய நிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
மதத்தில் கடவுளின் சர்வ வல்லமை
மனிதனைக் ‘கடவுளின் அடிமையாக’ மாற்றுவதைப் போன்றதே இதுவும்.
அரசர்
சர்வ வல்லமை உடையவரா அல்லது மக்கள் சர்வ வல்லமை உடையவர்களா..? இதுதான் பிரச்சினை.
…………………..தொடரும்……………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக