சனி, 28 ஜூன், 2025

தமிழமுது – 59. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :

 

தமிழமுது  59. ஆதிகாவியங்கள்ஒரு  பார்வை :

ஆதிகாவியங்கள் தமிழர் பண்பாட்டிற்கு ஒத்துவராதவை.ஆனால், அண்மைக்காலங்களில் அறிஞர்கள் பலர் ஆதிகாவியங்கலில் தான் உலக மக்களின் வாழ்வே அடங்கியிருப்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். குறிப்பாகத் தமிழர்களுக்கு  வாழ்வியல் நெறி ஒன்று இல்லாதது போலவும் எலாமே வடக்கிலிருந்து வந்ததில்தான் எல்லாமே உள்ளது என்று கதைக்கின்றனர். இது வேதனை மட்டுமல்ல வேடிக்கையாகவும் இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றை நமது முன்னோர்கள் நம்முடைய மொழியிலேயே நிறைய சொல்லியிருக்கின்றனர். அவற்றை விடுத்து அயல்மொழிகளில்  தமிழர்களுக்கு அறிவுரை வழங்குவது தேவையற்றவையே.

சங்க இலக்கியத்தின் தூய்மையும் ; திருக்குறளின்  தெளிவும் எம்மொழியில் காணக்கிடைக்கின்றன..? தமிழரின் வாழ்வியல் சிந்தனை உலகளாவிய உயர்ந்த தன்மை உடையது. போற்றிப் புகழத் தெரியாதவர்கள் புறம்போகவேண்டும். வாழ்க்கை என்பது விளையாட்டல்ல ; அது ஒரு தத்துவம் அத்தத்துவம் அறிவியல் வழிப்பட்டது. அதன் வழி வாழ்க்கைக்கு விளக்கமும் வழிமுறைகளையும் சொன்னார்களே தவிரக் கதையளக்கவில்லை. வாழ்க்கை விளக்காகத் திகழும்  பெண்களைத் தமிழர்கள் ஓரிடத்தும் . போகப் பொருளாகச் சொல்லவில்லை. ஒருவன் ஒருத்தியோடு இறுதிவரை உறுதியோடு வாழும் இல்லறம் என்பது தமிழர்கண்ட அறநெறி மட்டுமல்ல இன்றைய நிலையில் அஃது அறிவியலுங்கூட.

ஆகவே, ஆதிகாவியங்களின் கதைகள் நமக்குத் தேவையில்லை. இராமயணக் கதைத் தலைவன் இராமன் தமிழ் மண்ணில் நிற்க முடியாது.அத்தலைவன் செய்த முதல் போரிலேயே ஒரு பெண்ணைக் கொன்றான். (தாடகை வதம்) பெண் வதை / பெண் கொலை, தமிழ்ச் சமுதாயம் ஏர்றுக்கொள்வதில்லை. சங்கச் சமுதாயத்தில்பெண் கொலை புரிந்த மன்னன் நன்னன்  இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழிக்கப்படுகின்றான்.

சத்தியம் தவறாத உத்தம புத்திரனாக இராமனை ஏற்றுக்கொள்ள முடியாது.  கைகேயி பெற்ற இரண்டு வரங்களை இராமன்  முறையாகப் பின்பற்றவில்லைஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள  நீ போய், தாங்கரும் தவம் மேற்கொள்ள வேண்டும் என்றாள் கைகேயி. அதன்படி இராமன் மட்டுமே காட்டிற்குப் போக வேண்டும் மனைவி சீதை, தம்பி இலக்குவன் இப்படிக் குடும்பத்தோடு போனது குற்றமல்லவா..? துறவுக்குத் துணை தேவையா..? சீதையை இழந்தவன் இராமன் ; பழி கைகேயி மேல் இது என்ன நீதி..?

…………………..தொடரும், …………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக