சனி, 14 ஜூன், 2025

தமிழமுது – 47. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  47. கடவுளைப்பற்றி….!

கடவுளை மனித சமுதாயத்தின் முன் நிறுத்த எத்தனை கதைகள், எத்தனை சடங்குகள், எத்தனை பிரிவினை வாதங்கள் அத்தனையும் மனித சமுதாயத்தை அலைக்கழித்துக்

கொண்டிருக்கின்றன. மக்களைக் கடவுள் பக்கம் இழுக்க மாபெரும் முயற்சிகள், அறியாமை என்ற ஒன்றின் அடிப்படையிலேயே ‘ஆன்மா’ அலைமோதி கடவுளைச் சீவிக்கச் செய்கிறது. நாட்டில் எத்தனை கடவுள் ; கடவுள்களைக் கட்டமைக்க மதங்கள். மதங்கள் பொதுவாக மனிதநேயத்தைப் பலியிடுகின்றன.

மதங்கள் படுத்தும்பாடு:

கடவுள் மோசடியில் ஈடுபட்டதாகப் பல கதைகள் கூறினாலும் அக்கதைகள்  ‘நன்மைக்கே’ என்றுதான் முடிவுறும். ‘ கடவுள் நல்லவர்களைத்தான் சோதிப்பான் ; ஆனால் கைவிடமாட்டான்’ எனும் வழக்கு மொழியைக் கேட்கிறோமே..! கடவுள் படைக்கிறார் என்றால் சிலர் ‘ ஆண்டவன்   என்னை மோசம் பண்ணிட்டான்’, ’கடவுளே உனக்குக் கண் இல்லையா… காது கேட்கவில்லையா, நீ கல்லா…கடவுளா..? என்றெல்லம் ஏன் புலம்புகிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார், அவர் நம்பியவர்களை மோசம் செய்யமாட்டார் என்று கடந்தகால கதைகளைக் கூறுவார்கள். உண்மையில் பல மோசடிக்கும்பலுக்குக் கடவுள் துணையாக இருந்துவருகிறார் என்பதை நம் நடைமுறை வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கலாம்.

உலகம் உருண்டை எனும் அறிவியல் உண்மையை மதவாதிகள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கொள்கையை ஏற்க முடியாது என்றதும் கடவுள் பெயரால்தான் அரங்கேறின. நாளும் கோளும் இரவும் பகலும் இயற்கை நிகழ்வு என்பதை இறைவனின் சேவகர்கள் மறுத்தனர். சாந்திரனுக்கு மனிதன் செல்லாதவரையில் பாம்பு விழுங்கிய சந்திரனுக்குச் சமுதாயத்தில் இருந்த மதிப்பே வேறு ; இறைவன் இன்றி உயிர்கள் இருக்கின்றனவோ இல்லையோ.. மழையின்றி மண்ணில் இல்லை என்று மெய்யை உலகம் உணர்ந்து தெரிந்துகொண்டது.  எல்லா உயிர்களுக்கும் படியளக்கும் இறைவன் சோமாலிய நாட்டு மக்களுக்கு ஏன் அளக்கவில்லை..?

கடவுள்களைப் பூட்டி வைத்தும் காக்க முடியவில்லையே..!  உலக் உயிர்களைக் காப்பாற்றும் கடவுள் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை காவல் துறையினரே காப்பாற்றவேண்டியுள்ளது.

…………………………………………..தொடரும்………………………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக