வெள்ளி, 20 ஜூன், 2025

தமிழமுது – 52. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

     தமிழமுது  52. கடவுளைப்பற்றி….!

மதம் – மார்க்சீய நோக்கு :

மத  ஆய்வில் மார்க்சு 1843இல்  பெளவரைக்காட்டிலும் வெகு தொலைவு சென்றுவிட்டார்.”ஒருவர்  மேக மண்டலங்களுக்கு இடையில் சஞ்சரித்தால் வானத்தின் பந்தலைப் பிடித்துப் பூமிக்குக்குக் கொண்டுவர முடியாது. அதற்கு அவர்  பூமியில் நிற்க வேண்டும். மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன. மதஞ்சார்ந்த அவல நிலை சமுக உறவுகளின் மெய்யான அவல நிலையின் வெளியீடுதான், அவை அதை வளர்க்கின்றன.

மதம் என்பது, தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே. மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆள்கின்ற மனித தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே அது.

மனிதன் தன்னுடைய விடுதலைக்காகவும் இயற்கையை எதிர்த்தும் நடத்துகின்ற போராட்டத்தில் பலவீனத்தையும் ஆதரவற்ற நிலையையும் உணர்கிறான் ; எனவே கடவுளுக்கு வலிமையையும் எல்லாம் வல்ல தன்மையையும் தருகிறான். மனிதன் பூமியில் தன்னுடைய வாழ்க்கையின் அவல நிலைக்குப் பரிகாரத்தைக் கடவுளிடம் தேடுகிறான். அதனால்தான் அக்காலத்திய மதம் “இதயமற்ற உலகத்தின் இதயமாகவும் ; உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும்” இருப்பது மட்டுமின்றி, இந்த உலகத்துக்கும் அதன் நிலைமைகளுக்கும் எதிர்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு மெளனமானதே அது அடிமையின் “ ஒடுக்கப்பட்ட பிறவியின் பெருமூச்சே “   மதத்துக்கு எதிரான தீவிரப் போராட்டம் “ அந்த மதத்தை ஆன்மிக வாசனையாக்க் கொண்ட உலகத்துக்கு” எதிரான போராட்டத்தை முன்னூக்கிவிடுகிறது.

மக்கள் தங்களைப் பற்றியே ‘பயம் அடையும்படி’ கற்பித்தால்தான் அவர்களுக்குத் ’துணிவு’ ஏற்படும்.

…………………..தொடரும்……………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக