சனி, 28 ஜூன், 2025

தமிழமுது – 60. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :

 

தமிழமுது  60. ஆதிகாவியங்கள்ஒரு  பார்வை :

 

 பாரதம்பங்காளிகள் சண்டை. இந்தச் சண்டை நாட்டின் எல்லையை விரிவுபடுத்த நடந்ததல்ல ; நாட்டு மக்களைக் காப்பாற்ற நடைபெற்றதல்ல. கட்டிய மனைவியை வைத்துச் சூதாடியதால் ஏற்பட்டது. அவளோ  ஐவருக்கும் தேவி அழியாத பத்தினிஇப்படி ஒரு இழி நிலை தமிழ் மண்ணில் தமிழ் எழுத்துத் தோன்றிய நாள் முதலா இல்லை. அது போகட்டும் மனைவியை வைத்துச் சூதாடும் மன்னன் நாட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்தான் என்றால் குடிமக்கள் மனைவியரின் நிலை என்னவாகும்..? ஆதிகாவியங்களில் (திரெளபதி, சூர்ப்பணகை) மானபங்கம் செய்யப்படுகின்றனர்.  தமிழ்ச் சமுதாப் பெண்களோடு இவர்களை ஒப்பிட முடியுமா..? முடியாது.

 ஆதிகாவியங்களில் நடக்கும் போர்கள் மிகவும் வியப்பானவை. தமிழர்கள் காணாத போர்க்களமா..? தமிழர்தம் வாழ்வே வீரமும் காதலும் கொண்டதுதானே..! தமிழர்கள வீர நிலைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லவா..? தமிழர்கள் காதலிலும்  போரிலும் அறம் போற்றி வாழ்ந்தவர்கள். தமிழர் போர்க்களத்தில் மாயாஜாலங்கள், மந்திரங்கள், தந்திரங்கள், சித்து விளையாட்டுகள், என்று எதுவுமில்லை. தமிழர் போர்க்களத்தில் முற்றிலும் மாசுபடாத ஆண்மைமிக்க வீரம் மட்டுமே பேசும் ; வீரம் விளையும் களமாகப் போர்க்காளம் விளங்கியதை  வரலாறு காட்டும்.

ஆதிகாவியங்களில் இடம்பெற்றுள்ள போர்முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை. ஆண்மையுள்ள வீரர்கள் அங்குப் போர் புரியவில்லை. மாறாக அவதாரங்களின் அற்புத சக்திகள்,  சூழ்ச்சித்திறன்கள்,  இவையே அங்குப் போர்க்களத்தில் புழங்கின. இராம்ன சூழ்ச்சியால் வாலியைக்கொன்றான் ; வீடணன் செய்த துரோகத்தால் அரக்கர்களை அழிக்கிறான் ; இப்படியாக சோரம்போன  கோழைகளின்  வீரக்கதைகள் தமிழ் மண்ணில் ஒருநாளும்  போற்றுதற்குரியதன்று.

பாரதப் போரில்  தெய்வமாகிய கண்ணனின் சித்து விளையாட்டுகள் சூழ்ச்சித் திறன்கள் நகைப்புக்குரியதே. மாலைப் பொழுதை மந்திரத்தாலே மயங்கச் செய்கின்றான். கர்ணனைக்கொல்ல கண்ணன் சொன்ன சூத்திரம் இவையெல்லாம் ஆதிகாவியங்களின் போர் முறைகள் இவற்றால் பெறும் வெற்றிக்கு  வீரம் என்று பெயரா…. இந்தத் தெருக்கூத்து நடந்த இடத்திற்குப் போர்க்களம் என்று பெயரா..?

 ஆதிகாவியங்களில் உண்மையான காதலும் இல்லை ; நேர்மையான வீரமும் இல்லை. தமிழர்கள் பின்பற்ற வேண்டியது என்று சொல்ல எதுவுமே இல்லை ; எதுவும் இருப்பதாகக் கூறுபவர்கள் தமிழரின் மேன்மையான இலக்கண இலக்கிய வரலாறுகளை அறியாதோரே..!

ஆதிகாவியங்களில் இடம் பெற்றுள்ள இரண்டு கதைகளும் அரச குடும்பத்தைச் சார்ந்தவை. அரச குடும்ப விவகாரம் கோட்டையை விட்டு வெளியே வந்து சந்தி சிரித்தது. குடும்பத்தை இப்படிவைத்திருந்த அரசர்கள் குடிமக்களை எப்படி வைத்திருப்பார்கள்..?  இக்கதைகளைப் பற்றிய அறிவைத் தமிழர்கள் பெறாதிருப்பதே மேல்.

…………………..தொடரும், …………………….

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக