தமிழமுது – 50. கடவுளைப்பற்றி….!
கடவுள் அருள்பாலித்தல்:
கடவுளிடம் வைக்கும் மக்களின் வேண்டுதல்கள்
வினோதமானவை மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும்,
கந்துவட்டிக்காரன் வேண்டுதல் , நகௌவணிகன் விரமாலை அம்மனுக்கு அணிவித்துக் ”காபவுனில்
மாபவுன் அடிக்கும்தொழிலை விருத்தி செய்ய வேண்டும் இவை போன்று மேலும் பல உள. கடவுள்
என்னென்ன அவதாரம் எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவாரோ..?
பாவம் செய்தவன் மன்னிப்புக்கேட்பான் கடவுளும்
மன்னிப்பாராம் என்ன கொடுமை இது..? அவன் செய்த பாவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்
கடவுளின் அருள் என்னவோ..?
கொலைத்தொழில் செய்பவனும் கொள்ளை
அடிப்பவனும் கடவுளின் நண்பர்கள் போல ஒட்டி உறவாடுவார்கள் அவர்களுக்கும் கடவுள் அருள்
புரிவாராம்..!
‘மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாம்” வரதட்சினைக்கொடுமை யார் கொடுத்த வரம்..?
“நல்லவர்களைத்தான் கடவுள் சோதிப்பார்..”
மனிதன் நல்லவனாக இருப்பதே அரிது… அதற்குத் தண்டனை வேறா..? நல்லவனுக்குத் துன்பம் வந்து கடவுளைத் தூற்றி விடுவானோ என்ற
அச்சத்தில் கடவுளைக் காக்க இப்படிச் சொல்கிறார்கள் நல்லவர்களைச் சோதிப்பதற்கு கடவுள்
என்ன பைத்தியக் காரனா..?
கடவுள் கருணை உள்ளவந்தான் ஆனால்
இளிச்சவாயன் அல்ல. நீ கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு. கடவுளிடம் என்னென கேட்பது என்ற
அறிவே இல்லையா..? பசிக்கு உணவு கேட்பது , நோய்க்கு மருந்து கேட்பது, தேர்வுக்கு மதிப்பெண் கேட்பது, மனைவிக்குக் குழந்தை கேட்பது,எல்லாம் இழந்து
வெறும் ஆளாய்க் கேட்பாரற்றுக் கிடக்கும்போது இறைவா என்னை எடுத்துக்கொள் என்பது இவையெல்லாம் கடவுளின் வேலைகளா..? பின் ஏன் உனக்கு
இரண்டு கைகள், இரண்டு கால்கள், மண்டையில் மூளை எதற்கு.? கூத்தாடிகள் போல் ஆடாத ஆட்டமெல்லாம்
ஆட வேண்டியது இறுதியில் ஆண்டவனிடம் வந்து அழுவதால் ஆகும் பயன் என்ன.?
கோயில்களில் கடவுள் அனிந்திருக்கும் நகை உண்மையானதா
அல்லது கவரிங் நகைகளா../ கூட இருந்து கொள்ளையடிப்பவன் கடவுள் உண்டு என்று நினைத்தானா?
கடவுளே கருவறையில் இருப்பது உண்மையான உருவமா?
கடத்தப்பட்ட கடவுள்கள் கடல் கடந்து சென்றனரே எப்படி..?
கடவுள் என்பவர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ; மக்களை
எப்படிக் காப்பாற்றுவார். மதங்களால் கட்டமைக்கப்பட கடவுள்கள் மன்னர்களால் போற்றப்பட்டு
மாட மாளிகை கூட கோபுரங்களில் குடியேற்றப்பட்டனர்.
உலகம் இயற்கையாக
இயங்கிக்கொண்டே இருக்கிறது அது எந்தக் கடவுளுக்கும் கட்டுப்பட்டதன்று. மனிதனின் தோற்றமும்
முடிவும் இயற்கையின் ஆணைப்படியே எனினும் கடவுளைக் கட்டிக் காக்கும் மதவாதிகளின் நோக்கம் மட்டுமே நிறைவேறிக்கொண்டிருக்கின்றது.
மதவாதிகளின் கடவுளைப்பற்றிய தத்துவங்கள் அறிவுக்கும்
அறிவியலுக்கும் பொருந்தியவையா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக