வியாழன், 26 ஜூன், 2025

தமிழமுது – 57. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை

 

தமிழமுது  57. ஆதிகாவியங்கள் – ஒரு  பார்வை :

தொன்மைக் காலத்தே தோன்றியதாகக்  கருதப்படுகின்ற இராமாயணமும் மகாபாரதமும் ஆதிகாவியங்கள் என்றழைக்கப்படுகின்றன.. இந்தியா என்று சொன்னவுடனே உலக மக்களுக்கு இவ்விரு காவியங்களின் நினைவு எழுவது இயலபே, அந்த அளவிற்கு இவை பரப்பட்டுள்ளன. இந்தியாவில் எந்த ஒரு மூலையிலும் இக்காவியங்களின் செல்வாக்கைக் காணலாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் ஏதாவது ஒரு கலை வடிவில் இக்காவியங்கள் பரவியுள்ளன. தமிழிலும் இவை கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு இக்காவியக் கதைகள் தேவையற்றனவே. தமிழர் பண்பாட்டிற்கும் வாழ்க்கை ஒழுக்கத்திற்கும் முற்றிலும் வேறான கதையமைப்பை / செய்திகளைக் கொண்டுள்ளன இக்காவியங்கள். தமிழனின் ஆர்வக்கோளாறு எல்லாம் இங்கே விலை போகிறது – கலையாகிறது. வேற்று மொழியின் நாட்டம் அம்மக்களின் பண்பாடு  வேடிக்கையாகப் பார்க்கப்பட்டுப் புனிதமான கதையெனத் திணிக்கப்படுதலால் அவை  வெகுவாக இலகுவாகக் கவர்ந்துவிடுகின்றன. தமிழனுக்காகத் தமிழன் என்ன சொல்லியிருக்கிறான் என்று தமிழர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.அதனால் வந்த விளைவுதான் ஆதிகாவியங்களுக்கு வந்த செல்வாக்கு. அறிவைப் போற்றிப் புகழ்ந்த தமிழினம் பகட்டைப் பற்றி நிற்கிறது.

காவித் தண்ணீரைக் குடித்துவிட்டுக் கங்கை நீரை புனிதம் என்று சொல்லும் அறிவை இவன் எங்கிருந்து பெற்றான்.? பொதியத் தென்றலை உயிர் மூச்சாகக்கொண்ட இவன் இமயமலச் சாரலில் இறைவன் இருக்கிறான் என்று எப்படி உணர்ந்தான்..? அறிவு மயக்கமல்ல ; அறியாமையின் மயக்கமே.  வடக்கிலிருந்துவரும் வாடையில் கையது கொண்டு மெய்யது போர்த்தி கூனிக்குறுகி வாய்பேசா மடந்தையானான். இந்நிலை இழிநிலை ; இந்நிலை இனியில்லை என்றுணர்வது எந்நாள்..?

…………………..தொடரும்……………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக