சனி, 31 ஜனவரி, 2026

தமிழமுது –196– தொல்தமிழர் இசை மரபு:56. 3. ஐங்குறுநூறு . முல்லைப்பண் : தாஅ வண்ணம்.

 தமிழமுது –196– தொல்தமிழர் இசை மரபு:56.  

            3. ஐங்குறுநூறு .  முல்லைப்பண் : தாஅ வண்ணம். 

 

 “நீடினம் என்று கொடுமை தூற்றி   

வாடிய நுதலள் ஆகிப் பிறிது நினைந்து  

 யாம் வெம்காதலி நோய்மிகச் சாஅய்ச்  

சொல்லியது உரைமதி நீயே  

 முல்லை நல்யாழ்ப் பாண மற்று எமக்க.” - பேயனார், 478. 

 

             பிரிந்துறையும் தலைமகன் தலைமகள்விட்ட தூதாய்ச் சென்ற பாணனை ‘அவள் சொல்லிய திறம் கூறு’ எனக் கேட்டது.  

ிரிவால் வருந்தும் தலைவி நீ காலம் நீட்டியதை நினைந்து  நின்னைத்தூற்றிப் பலர் அறிய பேசிபிரிவு நோயால் மிகவும் மெலிந்து கிடந்தாள் என்று பாணன் உரைத்தான் 

ுல்லை நல்யாழ்ப் பாணன் -  முல்லைப் பண் இசைத்தவன்.  

 

        தாஅ வண்ணம்: 

  காடுகடந்து சென்ற தலைவர் உள்ளாரோ,”  

உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை   

அலங்குகுலை ஈந்தின்  சிலம்பு பொதி செங்காய்  

 துகில் பொதி பவளம் ஏய்க்கும 

        அகில்படுு கள்ளியம்   காடு இறந்தோரே.”- தனிப்பாடல் : 2. 

 ிலம்பி நூலால் மூடப்பட்ட துகிலும் பவழம் போலும் ஈச்சையின்காயும்முள்ளுடை கள்ளியும் சூழ்ந்த காடு கடந்து சென்ற தலைவர் இன்னும் திரும்பிவரவில்லையே  அவர் எங்கே உள்ளார்..  தோழி ?  தொல்காப்பியம் கூறும் தாஅ வண்ணம் செய்யுளில் இடையிட்டு வந்த எதுகையை உடையது. தொல். 1471. பாஅ வண்ணம் முதலாக முடுகு வண்ணம் ஈறாக  20 வண்ணங்கள் பாடலுள் யின்று வரல் மரபாகும். 

............................................ தொடரும்  ......................................... 

 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக