வியாழன், 19 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -70. கல்லெனக் கவின் பெற்ற விழா.

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -70. 

  முனைவர் இரெ. குமரன்: 6. கலித்தொகை: 

             தொல்தமிழர் -  வழிபாடு : கல்லெனக் கவின் பெற்ற விழா.

நூற் குறிப்பு ,  

                             எட்டுத்தொகை நூல்களுள் யாப்பு வகையால் பெயரமைந்தவை பரிபாடல், கலித்தொகை இரண்டுமாம். தொல்காப்பியர் அகப்பொருள் செய்திகளைப் பாடுதற்குரிய பாக்களாகப் பரிபாடல், கலி இரண்டினையும் குறிப்பிட்டுள்ளார். “கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனார் புலவர்.” என்பது நூற்பா. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே இந்தப்பாடு பொருள் மரபு இருந்தமை “என்மனார் புலவர்” என்ற தொடரால் அறியப்படும்.   

                  கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டது. கடவுள் வாழ்த்து - 1. நல்லந்துவனார் ;  பாலை - 35. பாடியவர், பாலைபாடிய பெருங்கடுங்கோ ;  குறிஞ்சி - 29. பாடியவர், கபிலர். ; மருதம் - 35. பாடியவர், மருதன் இளநாகனார். ;  முல்லை - 17, பாடியவர், சோழன் நல்லுருத்திரன் ; நெய்தல் - 33, பாடியவர் நல்லந்துவனார். 

கலித்தொகை - 5. 

“கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்    

புல்லென்ற களம்போலப் புலம்பு கொண்டு அமைவாளோ..?  

                                 பாலை பாடிய பெருங்கடுங்கோ, 5. 10 – 11.  

                     கல்லென்னும்   ஓசை உண்டாகும்படி,அழகு பெற்ற திருவிழாவை வழிப்படுத்திவிட்ட பிற்றை நாள் பொலிவற்ற இடத்தினைப் போலத் தனிமைகொண்டு  ஆற்றியிருப்பாளோ..?  

                தலைவன் பொருள் வழிப் பிரிவேன் எனக் கூறக்கேட்ட தோழி, ஆற்றாளாய், நீர் ஈட்டும் பொருளைக்காட்டிலும் நாங்கள் உமக்குச் சிறந்துள்ளோம் என்று எண்ணின் உம் செலவை நாளும் புள்ளும் விலங்கும் நீக்கும் ; நீ பிரிந்திருக்கத் தலைவி உயிர் வாழாள்,நீ பிரிந்த அன்றே இறந்துபடுவாள் எனக்கூறி  தலைவன் பிரிந்து செல்வதைத் தவிர்த்தாள். 

 ...............................................தொடரும்.........................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக