வெள்ளி, 30 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -இன்னாது அம்ம

பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந்தலை முடிப்பவும் நீர் இல்
வினைபுனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
                          கோவூர்கிழார்,புறம்.44:6-9


பாலின்றிக் குழந்தைகள் அழுகின்றன,மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர், அழகமைந்த வீட்டில் உள்ளோர் நீரின்றிக் கூவுகின்றனர்  இங்கு இனியும் இனிதாக  இருத்தல் கொடுமையன்றோ ?

ஓட்டைச் சட்டியில்.....

ஓட்டைச் சட்டியில் கொழுக்கட்டை வேகாது
இந்திய சனநாயக அமைப்புமுறையை மாற்றினாலொழிய ஊழலை ஒழிக்க முடியாது.  இந்திய சனநாயகம் ஊழலுக்கான ஊற்றுக் கண்.இந்திய அரசியல் அமைப்பு முறையைத் தலை கீழாக மாற்றி அமைக்க வேண்டும். மக்களாட்சிக்குக் கட்சி ஆட்சிமுறை ஒத்துவராது. கும்பல் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் கட்சி ஆட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் என்று எவரையும் சொல்ல முடியாது, எல்லோருமே கட்சிப் பிரதிநிதிகளே. சனநாயகத்தில் எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்றால் ஒருவரே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவது முறையா? முதலில் தேர்தல்  முறையை முற்றிலுமாகச் சீர்திருத்தவேண்டும்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -முன்னோர் பெருமை

தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி 
முழுது ஆண்டோர் வழி காவல
                                  (குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8)
உரை:தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும்  எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் நெடுஞ்செழியனும் போரிட்டனர், போரின் முடிவில் இரும்பொறையைச் செழியன் சிறையில் பிணித்தான், அங்கிருந்து தப்பித் தன் அரசு கட்டில் ஏறிய தன்மையை இப்பாட்டுள் குறுங்கோழியூர் கிழார் குறிப்பிடுகின்றார்.










0

திங்கள், 26 டிசம்பர், 2011

மக்களுக்காக


அன்னா கசாரே குழுவின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் -தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு – செய்தி

தேர்தல் ஆணையம், முதலில் மாநிலத் தேர்தல் ஆணையர்களைக் கண்காணிக்கட்டும்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - சான்றோர் சிந்தனை

மாரி பொய்ப்பினும்  வாரி குன்றினும் 
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்  இக் கண்ணகன் ஞாலம்
                              வெள்ளைக்குடி நாகனார், புறம்.35: 27-29
 உரை: மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினாலும்  காவலரைப் பழிக்கும் இவ்விடமன்ற உலகம்.
என்னே சங்கப் புலவரின் தொலை நோக்குச் சிந்தனை,  இயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம் அதாவது மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல்,மணல் கொள்ளையடித்தல், நெகிழ்வி பயன்படுத்தல், காற்றை மாசூட்டுதல் போன்ற கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இதைதான் செயற்கையால் இயற்கையை அழித்தல் என்று புலவர் கூறினார் என்று கொள்க.காவலர்  - அன்று- மன்னன், இன்று- ஆள்வோர்

செவ்வாய், 20 டிசம்பர், 2011


                                         “Extremist”
                    Bhagwad  Gita faces a ban in Russia
Moscow: Bhagwad Gita, the Hindu scripture cited the world over as a philosophy of life and living, faces the prospect of a  ban across Russia with a Siberian court set to rule on Monday on whether it qualifies as “extremist” literature.
The case, which has been on in a court in Tomsk city since June, seeks a ban on a Russian translation of “Bhagwad Gita As It Is”, written by A C  Bhaktivedanta Swami Prabhupada, founder of the International Society for Krishna Consciousness (Iskcon).
The prosecution wants the Gita banned across Russia, declared as a literature spreading “ social discord “, and its distribution in Russia made illegal.
The issue has sparked outrage among the Indian community in Moscow, numbering about 15,000, and Iskcon followers, who have appealed to the Indian government to intervene diplomatically to resolve the issue.
“ We want all efforts from the Indian government to protect the religious rights of Hindus in Russia, “ Sadhu Priya Das of Iskcon and a devotee of a 40- year- old  Krishna temple in central Moscow, said.
n  Sunday Times,Dec,18,2011

வியாழன், 15 டிசம்பர், 2011

திருக்களர் மு.சுவாமிநாத.....


தமிழ்ப்பணி:
இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும். நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே  இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, , , க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இவரெழுதிய  நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார். திருக்களர்ப்புராணம், திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்) திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம், களப்பாள் கசேந்திரவரதர் புராணம், களப்பாள் சிவசேத்திர விளக்கம், திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம். திருவிடும்பாவனம் சிவசேத்திர விளக்கம். முப்பொருள்  விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதிமகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கர மகிமை) திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம், சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும், சூரியகுலக் கள்ளர் சரித்திரம். செந்தமிழாரம்பப் போதனாமுறை என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார். கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.
                                                    களப்பாள் குமரன்

திருக்களர் மு.சுவாமிநாத.....


சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும்  பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர்  ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.