திருக்குறள்
– சிறப்புரை :507
காதன்மை கந்தா
அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம்
தரும்.
--- ௫0௭
அன்புடைமையை அடிப்படையாகக் கொண்டு, தாம் அறியவேண்டுவனவற்றை அறியாதவர்களைத்
தேர்ந்தெடுத்தல் ஒருவனுக்கு எல்லா அறியாமையினையும் கொடுக்கும். அஃதாவது முதல் கோணல்
முற்றும் கோணலாய் முடியும் என்பதாம்.
“
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது”
--- இனியவை நாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும்
நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக