திருக்குறள்
– சிறப்புரை :512
வாரி பெருக்கி
வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க
வினை.
--- ௫௧௨
பொருள் உற்பத்திக்கான இடையூறுகளை
ஆராய்ந்து நீக்கி, நாட்டின் பொருள் வருவாயைப் பெருக்க வல்லவனே வினை செய்தற்கு
உரியவனாவான்.
“
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும்
மறுமையும் பகையாவது அறியாயோ” --கலித்தொகை.
அறவழியிலிருந்து மாறுபட்டுப்
பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை
அறிய மாட்டாயா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக