திருக்குறள்
– சிறப்புரை :518
வினைக்குரிமை
நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச்
செயல்.
--- ௫௧௮
ஒரு செயலைத் திறம்படச் செய்தற்குரியவனைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவனைச்
அச்செயலுக்குப் பொறுப்புடையவனாகச் செய்தல் வேண்டும்.
அஃதாவது குறித்த வேலையைக் குறித்த
காலத்தில் குறையின்றிச் செய்து முடித்தலாம்.
“
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளிபட வாழ்தல் இனிது.
--- இனியவை நாற்பது.
ஏழை எளியவர்களை இகழ்ந்து பேசாது,
புகழ் உண்டாகும்படி வாழ்தல் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக