திருக்குறள்
– சிறப்புரை :523
அளவளாவு இல்லாதான்
வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந்
தற்று.
----- ௫௨௩
சுற்றத்தினரோடு மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடி உறவாட வாய்ப்பில்லாதவன்
வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்று -- பயனற்றதாம்.
“
கெட்டார்க்கு நட்டாரோ இல்” – பழமொழி.
வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.
நன்று.
பதிலளிநீக்கு