திருக்குறள்
– சிறப்புரை :525
கொடுத்தலும்
இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால்
சுற்றப் படும்.
---- ௫௨௫
கொடுத்து மகிழ்தலோடு இன்சொல் வழங்கும் ஆற்றலும் உடைய ஒருவனை வழி வழியாகச் சுற்றத்தினர் சூழ்ந்து நிற்பர்.
“ ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
குன்றுபோல் கூடும் பயன்:” --- சிறுபஞ்சமூலம்.
இல்லார்க்கு மனம் இரங்கிக் கொடுக்கும் பொருள் சிறிதாயினும்
அதனால் வரும் பயன் குன்றுபோல் மிகப் பெரிதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக