திருக்குறள்
– சிறப்புரை :524
சுற்றத்தால்
சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால்
பெற்ற பயன்.
---- ௫௨௪
உற்றார், உறவினர், நண்பராகிய சுற்றத்தினர் சூழ்ந்து கொள்ளுமாறு அன்போடு
இன்புற்று வாழ்வதே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதால் பெற்ற பயனாகும்.
“
உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
எக்கலத்தானும் இனிது.: --
நாலடியார்.
தன்னை உயிர்போல நேசிக்கின்ற உறவினர்
இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ், எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை
உடையதாம்.
நன்று.
பதிலளிநீக்கு