திருக்குறள்
– சிறப்புரை :529
தமராகித் தற்துறந்தார்
சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி
வரும்.
---- ௫௨௯
தமக்குச் சுற்றமாக இருந்தவர்
தம்மைவிட்டு நீங்கிச் சென்றாராயினும் பின்னர் அவ்வருத்தம் நீங்கித் தாமேவந்து கூடிக்கொள்வர்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே.”
”
பைஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை.”
– பழமொழி.
பாம்பின் படம் ஒத்த அகன்ற அல்குலையும் பொன் வளையலையும் உடையாய், மழை பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும்
அதுபோல, எப்பொழுதும் எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உற்ற நேரத்தில் உறவினரே
உதவி செய்ய வல்லார்.
நன்று.
பதிலளிநீக்கு