திருக்குறள்
– சிறப்புரை :530
உழைப்பிரிந்து
காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து
எண்ணிக் கொளல்.
--- ௫௩0
வேந்தன், தன்னிடமிருந்து பிரிந்துவென்ற
ஒருவன் மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்தானாகில், அவன் பிரிந்து சென்றதற்குரிய காரணங்களைக்
கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்து அவனைச் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும்.
“
பிழைத்த பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.”
சிறுபஞ்சமூலம்.
பிறர் செய்த தவறுகளைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமைகளை எண்ணிக்
கொண்டிருத்தல் சிறுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக