திருக்குறள்
– சிறப்புரை :519
வினைக்கண் வினையுடையான்
கேண்மைவே றாக
நினைப்பானை
நீங்கும் திரு.
---- ௫௧௯
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு செயலைச் செய்து முடிக்க, பெரும் முயற்சியுடன் கடுமையாக உழைக்கும் ஒருவனை, வினை ஏவியவன் தவறாக நினப்பானாகில், அவன் தேடிய செல்வம்
அவனை விட்டு நீங்கும்.
“
கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள்
இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” – கலித்தொகை.
உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும்
முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்.
நன்று.
பதிலளிநீக்கு