திருக்குறள்-
சிறப்புரை : 784
நகுதற் பொருட்டன்று
நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று
இடித்தற் பொருட்டு.
--- ௭௮௪
ஒருவருக்கொருவர் நட்புக்கொள்வது சிரித்து மகிழ்ந்து பொழுதை வீணே கழிப்பதற்கன்று,
நண்பர் நல்வழியினின்று விலகிச் செல்லுங்கால் அவரை இடித்துரைத்துத் திருத்துதற்கேயாம்.
“
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலியாகிப்
பின்னும் பயக்கும்…” ---ஐந்திணை எழுபது.
நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு,
அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக