திருக்குறள் -சிறப்புரை :793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு. --- ௭௯௩
ஒருவனை நட்பாக்கிக் கொள்வதற்குமுன், அவன் குணநலன்களையும், குடிப்பிறப்பினையும் குற்றங்குறைகளையும் அவனோடு எப்போதும் பழகுபவர்களையும் ஆராய்ந்து அறிந்தபின்னரே
அவனை, நட்பாக்கிக்கொள்ளல் வேண்டும்.
“ கரப்புடை உள்ளம் கனற்ருபவரே
செருப்பிடைப் பட்ட பரல்.”
–பழமொழி.
பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர், செருப்பில் அகப்பட்ட பருக்கைக்
கல் ஒப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக