திருக்குறள் -சிறப்புரை :802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.--- ௮0௨
(நட்பிற்கு உறுப்பு; மற்று அதற்கு; உப்பு ஆதல்.)
நட்பிற்குச் சிறந்த உறுப்பாவது நண்பர் உரிமையுடன் செய்யும் செயல்களே
; அத்தகைய செயல்களுக்கு உடன்பட்டு ஒன்றுபடுதல் சான்றோர்தம் கடமையாகும்.
” கோட்டுப் பூப்போல் மலர்ந்து
பின் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி.”---
நாலடியார்.
மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரைப்போல, இறுதிவரையிலும்
விருப்பத்துடன் தொடர்வதே நட்பின் சிறப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக