திருக்குறள் -சிறப்புரை :795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். ---- ௭௯௫
நன்னெறியினின்று நீங்கிச் செல்லும்போது, அழுது வருந்துமளவுக்கு இடித்துரைத்து,
நல்லாரைப் போற்றும் உலக இயல்பை எடுத்துக்கூறும் வல்லார்தம் நட்பினை ஆராய்ந்து, தேர்ந்து
கொள்ளல் வேண்டும்.
“…. ….. ….. பண்ணிய
யாழ் ஒக்கும் நட்டார் கழறும்
சொல் ..” – நான்மணிக்கடிகை.
நட்புடையார் இடித்துரைக்கும் கடுஞ்சொல் யாழோசை போலும் இனிமை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக