திருக்குறள் -சிறப்புரை :798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – ௭௯௮
சிறுமையான செயல்களைச் சிந்திக்காத
உள்ளம் வேண்டும் ; அதுபோல தனக்கு ஒரு துன்பம் வந்துற்றபோது தன்னைக் கைவிட்டுச் செல்வாரது
நட்பினைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
சிறியன சிந்தியாத மனம் வேண்டும்
; நட்டாற்றில் கைவிடுபவன் நட்பு வேண்டாம்.
“உப்பின் பெருங் குப்பை
நீர்படின் இல்லாகும்
நட்பின் கொழு முளை பொய்
வழங்கின் இல்லாகும்.” –திரிகடுகம்.
உப்புக் குவியலில் நீர் புகுந்தால் ஒன்றும் இல்லாமல் போகும் ; வளர்ந்து
வரும் நட்பாகிய மொட்டில் பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் நட்பு அழிந்து போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக